ஜனாதிபதியின் 7G பயணமானது நாட்டிற்கு பெறும் வரப்பிரசாதமென அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், ஏழு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் குறித்த மாநாட்டிற்கு ஜனாதிபதிக்கு ஜப்பான் அழைப்பு விடுத்துள்ளது.
யுத்தத்திற்கு பின்னர் நாடு, கடந்து வந்த பாதை மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பில் இதன்போது அங்கு கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும்,பொருளாதார ரீதியில் பாரிய முன்னேற்றத்தை இதன்போது எதிர்பார்க்கலாம் என இவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கடந்த வெளிநாட்டு சந்திப்புகளை ஜனாதிபதி நாட்டிற்கு சாதகமாக பயன்படுத்தியதை போன்று இதுவும் சிறந்த காலமாக அமையும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
குறிப்பாக மனித உரிமை ரீதியில் அறிக்கை வெளியிட்ட தலைவர்கள் முன்னிலையில் ஜனாதிபதி உரையாற்ற உள்ளமை எதிர் பார்க்கப்படும் சந்தர்ப்பமாக அமையும் என அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.