நீர்கொழும்பு கட்டான பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாம் மிகவும் தீர்மானம் மிக்கதொரு தருணத்தை எட்டியுள்ளோம்.
நாட்டின் சொத்துக்கள் கொள்ளையிடப்படுகின்றன. நாடு அடைந்துள்ள ஆபத்தான நிலைமையை கருத்திற் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
நாட்டில் ஊழல் மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. நாட்டிலிருந்து வறுமையை ஒழிக்க மைத்திரிபால சிறிசேன முயற்சிக்கின்றார். இந்த முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆயிரக் கணக்கானவர்களை அலரி மாளிகைக்கு அழைத்து ஜனாதிபதி பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார். மைத்திரிபால சிறிசேன ராஜபக்ச ஆட்சியை இல்லாதொழிக்கும் நோக்கில் தேர்தலில் போட்டியிடுகின்றார் என ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.