Breaking
Sun. Dec 22nd, 2024
ஐக்கிய நாடுகள் பொது சபையின் 71வது கூட்டத்தொடர் எதிர்வரும் 19ம் திகதி முதல் 26ம் திகதி வரை நியுயோர்க்கில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாநாட்டில் உரையாற்றவுள்ளார். இதற்காக ஜனாதிபதி நாளை அமெரிக்காவுக்கு பயணமாகவுள்ளார். ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்ட அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். ஜனாதிபதி தலைமையிலான குழுவில் அமைச்சர்களான மஹிந்த சமரவீர, பைஸர் முஸ்தபா உள்ளிட்ட பலர் இடம்பெறவுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாக 10 வருட காலமாக பதவி வகித்துவரும் பான் கீ மூன் தமது பதவிக் காலத்தை நிறைவு செய்து கூட்டத்தொடரில் உரையாற்ற உள்ளமை விசேட அம்சமாகும்.
இம்முறை மாநாடு 3 வகையில் முக்கியமானதாக அமைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை இணைந்து ஏற்பாடு செய்துள்ள அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் தொடர்பான மாநாடு எதிர்வரும் திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் நியுயோர்க்கில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு அமெரிக்க ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படுகிறது. இவர் இம்முறை ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுவது தனது பதவிக் காலத்தில் இறுதிக் காலப்பகுதியில் என்பது குறிப்பி;டத்தக்கது.

By

Related Post