வில்பத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்!
வில்பத்துவில் காடுகளை அழிப்பது ஒரு தவறான காரியமாகும்.
எங்கும் எந்தவொரு காடும் எவராலும் அழிக்கப்படக் கூடா. அதற்கு ஒரு போதும் அனுமதிக்கப் போவதுமில்லை.
இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இரண்டாம், மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு காணி வழங்கப்பட வேண்டும்தான். அது உண்மையே ஆனால், அதற்காக காட்டுப் பகுதியை அதற்காகப் பயன்படுத்த இடமளிக்க முடியாது’.
அதிரடிப்படையின் உத்தரவிலேயே கடந்த அரசில் வில்பத்துவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன
(ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கடந்த (20) ஊடகங்களின் பிரதம அதிகாரிகள் ஆசிரியர்களுடனான சந்திப்பில் தெரிவித்தவைகள் இவை)
ஜனாதிபதி அவர்களே! வில்பத்து காட்டை அழித்தே முஸ்லிம்கள் குடியேற முயற்சிக்கிறார்கள் என்று நீங்களுமா கூற வருகிறீர்கள்?
”காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும். அந்த நதியே காஞ்சி போய்ட்டா யாரால ஆறுதல் சொல்ல முடியும்….?”
– ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-