Breaking
Mon. Dec 23rd, 2024

களு­வாஞ்­சி­கு­டியில் நடத்­தப்­பட்ட காணா­மல் ­போ­ன­வர்­களை கண்­ட­றியும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணையின் போது 250 புதிய முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஆணைக்­குழு அறி­வித்­துள்­ளது.

வெல்­லாவெளி மற்றும் களு­வாஞ்­சி­குடி பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வு­க­ளுக்­காக காணா­மல் ­போ­ன­வர்­களை கண்­ட­றியும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைகள் களு­வாஞ்­சி­குடி பிர­தேச செய­ல­கத்தில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்­றது. இதன்­போது ஆணைக்­குழு முன்­பாக காணா­மல் ­போ­ன­வர்­களின் உற­வி­னர்கள் சாட்­சி­யங்­களை அளித்­து­ வந்­தனர்.

வெல்­லாவெளி மற்றும் களு­வாஞ்­சி­குடி ஆகிய பிர­தேச செய­ல­கத்­துக்­குட்­பட்ட பகு­தி­களில் இருந்து 315 பேர் சாட்­சியம் அளிக்க அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

ஓய்­வு­பெற்ற நீதி­பதி மக்ஸ்வெல் பராக்­கி­ரம பர­ண­கம தலை­மையில் முன்­ன­தாக இயங்­கி­வரும் இந்தக் குழுவில் நீதி­ய­மைச்சின் சட்ட வரைஞர் திணைக்­கள முன்னாள் பிரதி சட்ட வரை­ஞரும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் ஆணை­யா­ள­ரு­மான மனோ­கரி ராம­நாதன், குடி­சன மதிப்­பீட்டு புள்­ளி­வி­வரத் திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் ரீ.வி. பிரி­யந்தி சுரஞ்­சனா வித்­யா­ரத்ன ஆகி­யோ­ர­டங்­கிய குழு­வினர் காணாமல் போனோர் பற்­றிய விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 5.00 மணி வரையில் இந்த விசா­ர­ணைகள் நடை­பெ­ற­வுள்­ள­துடன் நேற்று வாழைச்­சேனை பிர­தேச செய­ல­கத்தில் விசா­ர­ணைகள் நடை­பெற்­றன.

இதே­வேளை களு­வாஞ்­சி­குடி மற்றும் வெல்­லாவெளி பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வு­களில் இருந்து சனிக்­கி­ழமை 153 புதிய முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணி வரையில் 70 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Post