காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நாளையுடன் முடிவிற்கு வருகின்றது.
எனினும் தற்போது காணமல் போனோர் தொடர்பிலான சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டு வருகின்ற காரணத்தினால் ஆயுட்காலத்தை நீடிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பதிவுசெய்யப்பட்ட சாட்சியங்கள் தெடர்பான அறிக்கையொன்று தயார் செய்யப்பட்டுவருவதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை தற்போதுவரை 19 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், முறையான சாட்சிகள் இல்லாத காரணத்தினால் 4 ஆயிரம் முறைப்பாடுகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரனகம மெலும் தெரிவித்துள்ளார்.