Breaking
Mon. Dec 23rd, 2024
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார்.

ஐ.டி.என் தொலைக்காட்சியில் தேர்தல் காலத்தில் ஒலி,ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்கான பல மில்லியன் ரூபாய் கொடுப்பனவு செலுத்தப்படாமை தொடர்பில் விசாரணைக்கு முகங்கொடுப்பதற்காகவே அவர் அங்கு பிரசன்னமாகியுள்ளார்.

ஏற்கனவே, பல தடவைகள் மஹிந்த ராஜபக்ஸ, இந்த ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

எனினும், குறித்த கொடுப்பனவுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும் அதனை தேர்தலின்போது பொறுப்பாக இருந்த பிரச்சாரக்குழுவே பொறுப்பேற்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

By

Related Post