சந்துன் ஜயசேகர
காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவுக்கு, மற்றுமொரு சர்வதேச நிபுணரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார் என ஆணைக்குழுவின் தலைவரும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியுமான மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தெரிவித்தார்.
முன்னாள் சர்வதேச நீதிபதியும் ஜப்பானைச் சேர்ந்தவருமான மொடூ நோகுச்சி என்பவரே ஆறாவது நிபுணராக நியமிக்கப்பட்டவர் ஆவார்.
குறித்த ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மேலைத்தேய மற்றும் ஆசிய நாடுகளிலிருந்து இதுவரை 6 நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். டெஸ்மென்ட் டி சில்வா, ஜோவெரி நைஸ், பேராசிரியர் டேவிட் கிரேன், அவ்தாஷ் கௌஷால் அஹ்மிர் பில்லாஹ் சூவ்பி மற்றும் நீதிபதி மொடூ நோகுச்சி ஆகியோரே இந்த அறுவர் ஆவர்.
இந்த ஆணைக்குழு, கடந்த 2004ஆம் ஆண்டு சட்ட அம்சங்கள் உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.