நாட்டில் இன ஐக்கியத்தை சீர்குலைப்பதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தும் ஏன் இன்னும் இன ஐக்கியத்தை சீர் குழைப்பவர்கள் கைது செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
கிண்ணியாவில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
கடந்த இரண்டு வார காலமாக மீண்டும் இந்த நாட்டின் இனவாதிகளின் இனவாத பேச்சுக்கள் மேலோங்கி இருப்பதை நாங்கள் காண்கின்றோம்.
இதேவேளை சில பௌத்த தேரர்களும் முஸ்லிம்களுக்கு எதிராக பல இனவாத கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.இலங்கை திருநாட்டில் இன ஐக்கியத்தை சீர்குலைப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அண்மையில் பல கூட்டங்களில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
இருந்த போதிலும் நாட்டின் சமூகங்களுக்கிடையே இனமுறுகலை ஏற்படுத்தும் இனவாத கருத்துக்கள் தெரிவிப்பவர்களை கைது செய்யாமல் இருப்பது கவலைக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.