Breaking
Sun. Mar 16th, 2025

பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) இந்தியாவிற்கான இருநாள் விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.

ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி இன்று  (13) புதுடில்லிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள கும்பமேளா கலாசார நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார். ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளமை விசேட அம்சமாகும்.

இதனை அடுத்து சாஞ்சி பகுதிக்கு செல்லவுள்ள ஜனாதிபதி அங்கு நிர்மானிக்கப்பட்டுள்ள அநகாரிக தர்மபாலவின் உருவச் சிலையையும் திறந்து வைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

By

Related Post