Breaking
Mon. Dec 23rd, 2024

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (10) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி இந்த விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது விளையாட்டுத் துறை அமைச்சின் 17 கோடியே 50 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்துவைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நகர திட்டமிடல் மற்றும் தேசிய நீர்வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெனார்ன்டோ, மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் உள்ளிட்ட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

400 மீற்றர் ஓடு பாதை, நீச்சல் தடாகம், உள்ளக அரங்கு, பார்வையாளர் அரங்கு முதலிய வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post