ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் விசேட கூட்டமொன்று இன்று திங்கட் கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
ஐ.தே.முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இணைந்து தேசிய அரசு அமைக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி சுதந்திரக் கட்சியினரை சந்திக்கும் முதலாவது கூட்டம் இதுவாகும்.
இக்கூட்டத்தில் அமைச்சர், பிரதியமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்ட சுதந்திரக் கட்சியினரும் மற்றும் எதிர்க் கட்சி வரிசையில் அமரத் தயாராகும் சுதந்திரக் கட்சி எம்.பி.க்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இக்கூட்டத்தின் போது சுதந்திரக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள், அரசின் திட்டங்கள் உட்பட உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.