Breaking
Sun. Dec 22nd, 2024

ஐக்கிய தேசியக் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு விழாவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்க உள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர்மாதம் 10ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட உறுப்பினர்களினால் இந்த நிகழ்வு நடத்தப்பட உள்ளது.

பொரளை கெம்பல் மைதானத்தில் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு நிகழ்வு நடைபெறவுள்ளது.

சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் ஐக்கியதேசியக் கட்சியின் 69ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

70ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் பிரித்தானியா, இந்தியா, சீனா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளின் அரச தலைவர்களும் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு தினம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ம் திகதி கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

By

Related Post