நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுபல சேனா அமைப்பின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தாம் களமிறக்க உள்ளதாக அவ்வமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள பௌத்த மதத்தை அடிப்படையாக கொண்ட இந்த யோசனையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~வுக்கும் எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் அறிவிக்க உள்ளதாகவும் அவ்வாறு இந்த யோசனைக்கு அவர்கள் மறுப்பு தெரிவிப்பார்களாயின் தாம் தனியாக வேட்பாளரை களமிறக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (VK)