ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அழைப்பு, இன்று வியாழக்கிழமை (20) பிற்பகலில் உள்ள நல்ல நேரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அறிவிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், நேற்று இரவு இடம்பெற்ற போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷவே போட்டியிடுவதற்கான கட்சியின் அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.