நியாயமான தேர்தல் ஒன்றுக்கான பொதுமக்கள் நடவடிக்கை என்ற பெப்ரல் அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி 35 ஆசிய நாடுகளின் கண்காணிப்பாளர்களும் உள்ளுர் கண்காணிப்பாளர்களும் சர்வதேச கண்காணிப்பாளர்களும் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவர் என்று பெப்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராட்சி தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடிய பின்னரே இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளும் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுவர் என்று அமைப்பின் செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.