இலங்கையின் அனைத்து அதிபர் ஆசிரியர்களின் சேவை தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் எதிர்வரும் ஜனவரி மாதம் தீர்க்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அலவ்வ ஹும்புலுவ மத்திய மஹா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மஹிந்தோதய தொழிநுட்ப கூடத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் இன்றைய நிகழ்விலேயே இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டு லட்சத்து 20ஆயிரம் ஆசிரியர்களின் நியமனம், சம்பள பிரச்சினை ஆகியவற்றை உடனடியாக தீர்க்க நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கல்வியமைச்சு மற்றும் மாகாண சபைக்கு கீழ் சேவை புரியும் அனைத்து ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் சம்பள கொடுப்பனவு ஆகியன டிசம்பர் 31ஆம் திகதிக்குள் தீர்க்கப்படும் எனவும் அவர் தெர்வித்துள்ளார்.