நாட்டில் பல அமைச்சர்கள் பெயரளவு அமைச்சர்களாகவே கடமையாற்றி வருவதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களின் செயலாளர்களுக்கு அலரி மாளிகையிலிருந்தே உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், அமைச்சர்களின் உத்தரவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணிகளை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய போது கடுமையான அழுத்தங்களை எதிர்நோக்க நேரிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மாஹிந்த ராஜபக்ஸ மாற்றமடைந்துள்ளதாகவும், எனக்கு தெரிந்த ராஜபக்ஸவை தற்போது காண முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நீதவான்கள் மீதும் தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கட்சி என்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்திலிருந்து விலகிச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.