Breaking
Sun. Dec 22nd, 2024

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் இயற்கை அனர்த்தத்தினால் ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கானவேலைத் திட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

உலகின் பொருளாதார சுற்றாடல் நெருக்கடிக்கு மத்தியிலும் கூட இலங்கையினால் பொருளாதார இலக்குகள் பலவற்றை பூர்த்திசெய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

வெனிசுவெலாவில் 18 ஆம் திகதி நடைபெற்ற அணிசேரா நாடுகளின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்தவிடயங்;களை குறிப்பிட்டார். இறைமைஒற்றுமை சமாதானம் ஆகியவற்றின் ஊடாக அபிவிருத்தி என்ற தொனிப்பொருளில்அணிசேரா நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.

அணிசேரா நாடுகள் அமைப்பின் 120 நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். அமைச்சர் இங்குஉரையாற்றுகையில்’தற்பொழுதுள்ள அங்கத்தவர்களுக்கிடையிலான தொடர்புகளுடன் சுற்றாடலில் எதிர்நோக்கப்படும்சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளப்பட்டுள்ளதாகம் தெரிவித்தார்.

‘பயங்கரவாதம், மத அடிப்படைவாதம், பிராந்தியத்தில் முரண்பாடுகள், மோதல், அகதிகளின் எதிர்காலம், சமூக சமநிலையற்றநிலைமை, மனிதவுரிமைகள், சர்வதேச பொருளாதாரம் மற்றும் சுற்றாடல் ஆகியவற்றின் சவால்கள் பலஎதிர்நோக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பின் நாடுகளுக்கிடையிலான பொருளாதார சமூக அபிவிருத்திக்கு இவை பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.இவ்வாறான சூழ்நிலையில் யதார்த்த அபிவிருத்தி வேலைத்திட்ட நிகழ்ச்சி நிரல், தேவையானபிரவேசத்திற்காக அணிசேரா அமைப்பின் அங்கத்துவ நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வை முன்னெடுக்கப்படுவதற்குமுக்கியமானதாகும். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் இயற்கை அனர்த்தத்தினால் ஏற்படும்பாதிப்பை குறைப்பதற்கான வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கான சமத்துவ நிலையைஉறுதிப்படுத்துவதற்கு பல்வேறு துறைகளில் முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நல்லாட்சிஅரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் சட்டவாட்சியை ஸ்தாபிப்பதற்கும், மனிதவுரிமையை பாதுகாப்பதற்கும் நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. நிலையான அபிவிருத்தியைஅடைவதற்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், கல்வித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க மேலும் தெரிவித்தார். சர்வதேச சமாதானத்திற்காக பல்வேறு நாடுகள்மத்தியில் நிலவும் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மற்றும் சமாதான செயற்பாடுகளின் மூலம் தீர்த்துக் கொள்வதற்கானநடவடிக்கைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என்றும் கூறினார்.

By

Related Post