Breaking
Thu. Dec 26th, 2024

இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பணியாற்றத் தாம் தயார் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
நல்லாட்சி மற்றும் சர்வதேசத்துடன் இணைந்து செயலாற்றுதல் குறித்த புதிய அரசின் அர்ப்பணிப்புக்களையும் அது வரவேற்றுள்ளது.

இதேவேளை, வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்திற்கும், அமைச்சரவை அலுவலகத்திற்குமான பிரபுக்கள் சபையின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய அரசு எதிர்காலத்தில் இலங்கை குறித்த ஐ.நா விசாரணைகள் குறித்து தாராள மனப்பான்மையை
வெளிப்படுத்தும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Post