Breaking
Thu. Dec 26th, 2024

இந்திய-இலங்கை மீனவர்களின் பிரச்சினையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்த்துவைப்பார் என்று தான் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியா – இலங்கை மீனவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் மிக நெருக்கமாக நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

அதேபோன்று தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவும் செயற்படுவார்.

இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதற்கான கலந்துரையாடலை ஒத்திவைக்குமாறு இலங்கை, இந்தியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக இந்தியா ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அதனை கருத்தில் கொண்டு நாமல், தனது டுவிட்டர்  பக்கத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கலந்துரையாடல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதனால் வடபகுதி மீனவர்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,

யுத்த காலகட்டத்தில் பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்த மக்களின் வாழ்க்கை மீண்டும் பாதிப்படைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Post