Breaking
Thu. Dec 26th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் தலைமையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாச அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம்
புத்தள மாவட்டம் ஆனமடுவ மதவாக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அலி சப்ரி ரஹீம் அவர்கள் கூறுகையில்…!

எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது சிறுபான்மை சமூகம் பாரிய சவால்களுக்கு மத்தியில் இந்த தேர்தலை எதிர்நோக்க இருக்கின்றோம்..எமது சமூகத்தின் நலன் கருதி சிறுபான்மை முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் ஒன்று கூடி ஒரே அணியில் நின்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாச அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன…!

நாமும் எமது முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கீழ் நின்று சஜித் பிரமதாச அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதே எங்களின் முடிவாக இருக்க வேண்டும்..எமது சமூகத்தையும் எங்களின் அரசியல் தலைமைகளையும் ஒரு பயங்கர வாத கும்பலுடன் இணைத்து பேசிய அணியினர்கள் தற்போது தேர்தல் களத்தில் இறங்கி போட்டியிடுகின்றன…

இவர்களை எமது சமூகம் புறக்கணிக்க வேண்டும்.எங்களின் வாக்கு பலத்தை காட்டி இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் ஒரே ஒரு காலம் என்றால் அது இந்த ஜனாதிபதி தேர்தலே ஆகும். ஆகவே எதிர் வரும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாச அவர்களுக்கு முழுமையான ஆதரவை கொடுத்து சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்போம். என்றும் அவர் தெரிவித்தார்.

Related Post