Breaking
Wed. Dec 25th, 2024
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து ஒட்டமாவடி பிரதான வீதியில் எதிர் வரும் 25.10 2019  வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு  காரியாலயம் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக  கைத்தொழில் வர்த்தகநீண்ட நாள் இடம்பெயர்வு கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி யின் தலைவருமாகிய அல் ஹாஜ் றிஷாட் பதியுத்தீன், விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, அழைப்பின் பேரில் வருகை தரவுள்ளார்.
இந்நிகழ்வில் துறைமுக மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்றூப், திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில்,  அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷ்ஹாக்றகுமான்,   கட்சியின் செயலாளர் நாயகம் சுபைதீன் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத்,  நுகர்வோர் அதிகார சபை உறுப்பினர் சட்டத்தரணி அன்சில், நிந்தவூர் தவிசாளர் தாஹிர் மற்றும் முக்கிய அரசியல் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
எனவே அனைத்து பொது மக்களையும் வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

Related Post