Breaking
Mon. Dec 23rd, 2024
முஸ்லிம் தலைமைகளின் கைதுகள், சிறுபான்மை சமூகத்தை ஒடுக்கும் அடக்குமுறையே ஆகும் என கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் தெரிவித்தார்.

ஜனாஸா எரிப்பிற்கு எதிராக, கிண்ணியா நகர சபையின் இன்றைய (28) சபை அமர்வில் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீமின் தலைமையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றம் இடம்பெற்றதுடன் முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களின் கைதுக்கு எதிரான பிரேரணை தொடர்பிலும் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொரோனா மூலம் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யாது, தகனம் செய்வது கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்து, குறித்த பிரேரணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களின் கைது அரசியல் பழிவாங்கலாகும். அரசின் பழி தீர்க்கும் செயற்பாடே இது. இவ்வாறான கைதுகள் எமது சமூகத்தின் மீது ஒருவகை அச்சத்தை ஏற்படுத்துகிறது. முஸ்லிம் அரசியல் தலைமைகள் அடக்கி ஒடுக்கப்படுவதானது, இவ் அரசின் மீது  சிறுபான்மை மக்களுக்குள்ள நம்பிக்கையை இல்லாமல் செய்கின்றது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் போன்ற சமூகத் தலைமைகளின் கைதும் இப்படியான அரசியல் காழ்ப்புணர்ச்சியே ஆகும்.
முஸ்லிம் சமூகம் ஆயிரம் வருடங்கள் இந்த மண்ணில் வாழ்ந்து வந்தமைக்காக வரலாறுகள் சான்றுபகின்றன. அமைதியையும் சமாதானத்தையும் விரும்புபவர்களே தங்களும் தாங்கள் சார்ந்த கட்சிகளும். எனவே, இவ்வாறான கைதுகள் நிறுத்தப்பட்டு, நாட்டில் சிறுபான்மைச் சமூகங்கள் நிம்மதியாக, தலைநிமிர்ந்து வாழக்கூடிய சூழலை இந்த அரசாங்கம் ஏற்படுத்தித்தர வேண்டும்” என்றார்.

Related Post