கட்டாரில் இருந்து பழுலுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)
காத்தான்குடி-1ம் குறிச்சியைச் சேர்ந்த மௌலவி எம்.ஐ.எம்.ஹஸ்ஸாலி (பலாஹி) (வயது 55) நேற்று புதன்கிழமை காத்தான்குடியில் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
ஒரு ஜனாஸா தொழுகைக்காக அவர் சென்ற போதே இம்மரணம் ஏற்பட்டுள்ளது.
காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக்கல்லூரியில் பட்டம் பெற்று வெளியாகிய இவர், கட்டார் கொழும்பு ரெஸ்டுரண்டில் பல வருடங்களாக பணிபுரிந்தது மட்டுமல்லாமல் பல்வேரு சமூக சேவைகளில் ஈடுபட்டும் வந்துள்ளார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றி இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
இவரின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காகவும் கப்று வாழ்க்கை பிரகாசிப்பதற்காகவும் வல்ல இறைவனிடத்தில் பிரார்த்திக்குமாறு அவரின் குடும்பத்தார் மற்றும் அவரோடு கட்டாரில் இருந்த சகோதரர்கள் அனைவரும் கேட்டுக்கொள்கின்றார்கள்.