நரேந்திர மோடி துவக்கி வைக்கும் ஜன் தன் யோஜனா திட்டத்துக்கு தமிழகத்தில் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்ததைப் போல ஜன் தன் யோஜனா திட்டம் என்கிற அனைவருக்கும் வங்கிக் கணக்கு மற்றும் அதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய் காப்பீடு, ஓய்வூதியம் பெறும் திட்டத்தை இன்று பிரதமர் துவக்கி வைக்கிறார். உடனடியாக நாடு முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தகவல் சேகரிக்கும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு ஜெயலலிதா உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.மேலும், இந்த திட்டத்தை அமல்படுத்த புதிய துவக்க விழா நிகழ்ச்சிகளும் நடத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு ஜெயலலிதா அறிவுறுத்தியும் உள்ளார்.