Breaking
Mon. Dec 23rd, 2024

நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு, “உரக” மற்றும் “தக்சிமயேயமா” எனும் இரு ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை நேற்று (11) வந்தடைந்துள்ளன.

இதன் போது கடற்படை மரபுகளுக்கு இணங்க இலங்கை கடற்படையினர் அவற்றை வரவேற்றனர். அத்துடன் அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் நல்லெண்ணம் மற்றும் நட்பின் வெளிப்பாடாக நட்புரீதியான தயூளக்கட்டுப் பந்தாட்டப் (பேஸ் போல்) போட்டியில் இலங்கை கடற்படையின் பேஸ்பால் அணியுடன் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் அவர்கள் எதிர்வரும் பதினான்காம் திகதி இலங்கைக்கான விஜயத்தினைப் பூர்த்தி செய்து ஜப்பானிற்கு புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post