இலங்கையில் ஜப்பானிய முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கும் நோக்கில் டோக்கியோவில் முதலீட்டாளர் ஊக்குவிப்பு மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது.
ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு மிகவும் விருப்பமான நாடு என்ற வகையில் இலங்கையில் ஜப்பானிய முதலீடுகளை அதிகரிப்பது குறித்து நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இதன் ஒரு கட்டமாக அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஏற்பாட்டில் ஜப்பானியத் தலைநகர் டோக்கியோவில் முதலீட்டாளர் ஊக்குவிப்பு மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்த மாநாட்டிற்கு ஜப்பானிய அரச அபிவிருத்தி நிறுவனங்கள் மற்றும் முன்னணி வங்கிகள் அனுசரணை வழங்கியிருந்தமை காரணமாக பெருமளவிலான முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் காரணமாக எதிர்வரும் மாதங்களில் ஜப்பானிய முதலீட்டாளர்களின் வருகை இலங்கையில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.