Breaking
Wed. Mar 19th, 2025

ஜப்பானில் இலங்கையின் வர்த்தக கண்காட்சியானது 12ஆவது தடவையாகவும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பானின் டோக்கியோ நகரில் இந்த கண்காட்சியானது செப்டம்பர் மாதம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக ஜப்பானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இரண்டு நாடுளுக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதே இதன்நோக்கம் என இலங்கை வர்த்தக சங்கம் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆகியன இணைந்து தெரிவித்துள்ளன.

மேலும், இந்த கண்காட்சி தொடர்பான மேலதிக தகவல்களை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் தொலைபேசி இலக்கத்தினுடனோ அல்லது அதன் இணையப் பக்கத்திலோ தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

By

Related Post