உகண்டாவுக்கு அண்மையில் விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி ஜப்பானுக்கு விஜயம் செய்ய உள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானில் வசித்து வரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸவிற்கு நெருக்கமானவர்கள், முன்னாள் ஜனாதிபதியை ஜப்பானுக்கு அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இவர்கள் விமல் வீரவன்ஸ, ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை ஜப்பானுக்கு அழைத்திருந்தனர்.
ரோஹித்த அபேகுவர்தன போன்றோருடன் தனக்கு எந்த கொடுக்கல் வாங்கலும் கிடையாது எனக் கூறி, கோத்தபாய ராஜபக்ச அந்த அழைப்பை நிராகரித்திருந்தார்.
எவ்வாறாயின் ஜப்பான் செல்லும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் ஜப்பான் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.