Breaking
Sun. Dec 22nd, 2024

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஜுன் மாதம் 09ஆம் திகதி, ஜப்பான் நாட்டுக்கு சுற்றுலா மேற்கொள்ளவுள்ளார்.

அவருடன், ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் சிலரும் இணைந்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர் சிலரால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோரும் இந்தப் பயணத்தில் இணைந்துகொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதிக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அவர் மேற்கொள்ளும் மூன்றாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

இதற்கு முன்னர் உகண்டா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

ஜுன் 9ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையில் அங்கு தங்கியிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ, புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த விஹாரையையும் திறந்து வைக்கவுள்ளார்.

By

Related Post