ஜப்பான் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.
ஐந்து நாட்களுக்கான விஜயத்தை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நேற்றையதினம் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார்.
இன்றையதினம் அந்த நாட்டின் நிதி அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அதேநேரம் அவர் இன்று ஜப்பானின் நாடாளுமன்றத்தில் விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.
ஜப்பானின் நாடாளுமன்றத்தில் இதுவரையில் இரண்டு உலக நாடுகளின் தலைவர்கள் மாத்திரமே சிறப்புரையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆகியோரே இந்த வாய்ப்பினை பெற்றுள்ளனர்.