Breaking
Mon. Dec 23rd, 2024

சிறிய மற்றும் மத்திய தர தொழில் முயற்சியாளர்களின் போட்டித்திறன் கொண்ட உற்பத்தி முறைமையினை வலுப்படுத்தி அவற்றை தேசிய மற்றும் ஜரோப்பிய சந்தைகளில் சிறந்த சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் தமது அமைச்சு செயற்படுவதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன், இதன் மூலம் எமது பொருளாதார இலக்கை அடைந்து கொள்ளுவதற்கான ஒரு உபாய மார்க்கமாக ஜரோப்பிய ஒன்றியத்தின் சலுகை அமைந்துள்ளது என்றும் கூறினார்.

இலங்கையில் வர்த்தகத்திற்கு ஆதரவளிப்பதற்கான செயற்திட்டம் ஒள்றினை ஜரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜக்கிய நாடுகள் ஒன்றியம் இணைந்து ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தின் அறிமுக நிகழ்வு இன்று மாலை கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் இடம் பெற்றது.

இதில் ஜரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான துாதுவர் துஹ் லால் மர்கு, தேசிய கொள்கை வகுப்பு மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எம்.ஜ.எம்.றபீக், சர்வதேச வர்த்தக மையத்தின் வதிவிட பணிப்பாளர் ஆஷிஸ் ஷாஹ், யுனிடோவின் தரப்படுத்தல் மற்றும் வர்த்தக துறைக்கான இணைப்பாளர் ஸ்டபன் காஸர் உட்பட பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.

இந்த நிகழ்வின் போது இரு தரப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையும் பறிமாறப்பட்டது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் தமதுரையில் போது –

2013 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பலனாக ஜரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தெரிவு செய்யப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் அதனுடன் சூழவுள்ள வேலைத்திட்டங்கைளை விரிவுபடுத்த கிடைத்துள்ள சந்தர்ப்பத்திற்கு தான் மகிழ்ச்சி அடைவதாகவும்,2014-2020 காலப்பகுதிக்குள் 5 மில்லியன் யூரோக்களை உதவியாக வழங்க ஜரோப்பிய ஒன்றியம் இணக்கம் வெளியிட்டிருந்ததை இதன் போது நினைவுபடுத்துவதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

இந்த திட்டத்தை நான்கு வழிகளில் நடை முறைப்படுத்த போதுமான வரைவு வரையப்பட்டுள்ளது.
முதலாவது – உலக வர்த்தக அமைப்பு ஊடாக தயாரிக்கப்பட்டுள்ள கொள்கை வகுப்பு போட்டித்தன்மை கொண்ட ஏற்றுமதிக்கு உந்து சக்தியாக அமையும் வழி வகைகளை நடை முறைப்படுத்தல்,
இரண்டாவது – ஜரோப்பாவுக்கும்,சார்க் வலயத்திற்கும் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களின் தயாரிப்பின் அளவை அதிகரிக்கச் செய்தல்.

மூன்றாவது –இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தேவைக்கு அமைய தேசிய மற்றும் ஜரோப்பிய நாடுகளின் சந்தையின் அமைவுக்கு ஏற்ப உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவை பயன்பாட்டினை அதிகரித்தல்.

நான்காவது – சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களின் போட்டித்தன்மை கொண்ட ஏற்றுமதியான உணவுகளுக்க பயன்படுத்தும் வாசனை பொருட்கள் மற்றும் சுவையூட்டிகள் துறையினை வளர்ச்சியுச் செய்வதுடன்,இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இதனது பங்களிப்பினை ஏற்படுத்தல என்பவாகும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இதன்போது கூறினார்.

ஜரோப்பிய ஒன்றியத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் இலங்கை 8 மில்லியன் யூரோக்களை பெற்றுக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.இதனை ஏற்படுத்துவதற்கும்,நடை முறைப்படுத்துவதற்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வழங்கிய ஒத்துழைப்பு இன்றியமையாததொன்று.

இலங்கைக்கு தற்போது கிடைக்கப்பெற்றும் ஜீஎஸ்பி வரிச்சலுகை மூலம் கடல் உணவு ஏற்றுமதித் துறை தற்போது முன்னேற்றம் காண ஆரம்பித்துள்ளதை இதன் போது நினைவு படுத்திய அமைச்சர் றிசாத் பதியுதீன் இலங்கை ஏற்றுமதி சங்கிலியினை பலப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு ஜரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ள பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றும் இதன் போது கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறியமை குறிப்பிடத்தக்கது.

r-6-jpg2_-6-jpg3_-6 r-1-jpg2_-1-jpg3_-1-jpg4_-1 r99-1

By

Related Post