புரிந்துணர்வின் மூலம் இணக்கப்பாட்டிற்கு வந்த பின்னர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரான மைத்ரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக ஜாதிக ஹெல உறுமய குறிப்பிடுகின்றது.
புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் எதிர்வரும் திங்கட்கிழமை கைச்சாத்திடவுள்ளதாக ஜாதிக ஹெல உருமயவின் தலைவர் அதுரலியே ரத்தன தேரர் தெரிவிக்கின்றார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை பாராளுமன்றத்திற்கும், நீதிமன்றத்திற்கும் பொறுப்புக்கூறும் வகையில் மறுசீரமைத்தல், தேர்தல் முறைமையில் மாற்றம், ஆணைக்குழுக்களை நியமித்தல் போன்ற அடிப்படை காணரங்களை உள்ளடக்கியதாக புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக ரத்தன தேரர் கூறுகின்றார்.
எவ்வாறாயினும், புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின்னர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வெட்பாளர் மைத்ரிபால சிறிசேனவின் வெற்றிக்காக ஜாதிக ஹெல உறுமய செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்றும் தேரர் சுட்டிக்காட்டினார்.