பிரசல்ஸ்ஸில் நேற்று (11) இடம்பெற்ற சந்திப்பை அடுத்து, விரைவில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரதி வெளியுறவு அமைச்சர் ஹர்ச டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
நேற்றைய சந்திப்பு தொடர்பாக கருத்துரைத்த ஹர்ச,
இலங்கை தற்போது ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்வதற்கான இறுதி அடியை, அதாவது விண்ணப்பிக்கக்கூடிய நிலையை அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை – ஐரோப்பிய ஒன்றியம் செயற்குழு கூட்டம் நேற்று பிரசல்ஸ்ஸில் இடம்பெற்றது, இது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன்னதான இறுதி பேச்சாக அமைந்திருந்தது.
இதில் இலங்கையின் சார்பில் பொது வர்த்தக பணிப்பாளர் சோனாலி விஜேயரட்ன உட்பட்ட குழுவினர் பங்கேற்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில், ஒன்றியத்தின் வர்த்தக பணிப்பாளர் பீட்டர் பேர்ஸ் பங்கேற்றார்.
இதன்போது இலங்கையின் மனித உரிமைகள் மேம்பாடு, ஜனநாயக திரும்பல்கள் குறித்து ஆராயப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.