Breaking
Sun. Dec 22nd, 2024

இலங்கை விவகாரம் தொடர்பான ஜெனிவா அறிக்கைக்கு எமது அர­சாங்கம் வெற்­றி­க­ர­மான முறையில் முகங்­கொ­டுக்­கும்.தேசிய நல்­லி­ணக்கம் தொடர்பில் சர்­வ­தேச ஒத்­து­ழைப்­புடன் விசேட பொறி­மு­றை­யொன்றை ஆரம்­பிப்போம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னை­களை கண்­ட­றிந்து அதற்­கான உரிய தீர்­வினை முன்­வைப்­ப­தற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் முஸ்லிம் கட்­சி­க­ளுடன் ஒன்­றி­ணைந்து செயற்பட்டு நாட்டை முன்­ந­கர்த்தி செல்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

என்னை தோற்­க­டிப்­ப­தற்கு 2005 இல் பிர­பா­க­ர­னுடன் மஹிந்த ராஜ­பக் ஷ உடன் ப­டிக்கை செய்­து கொண்­ட­மையின் ஊடாக தேசிய பாது­காப்­புக்கு பாதிப்பு ஏற்­ப­டா­விடின் ,என்­னு­டைய நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் மாத்­திரம் எவ்­வாறு தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக மாறும்? என்றும் பிரதமர் கேள்வி எழுப்பினார்.

கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்­டலில் நேற்று இடம்­பெற்ற வர்த்­தக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே பிரதமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு சிறுபான்மை மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னைகள் தீர்ப்­பது மிகவும் அவ­சி­ய­மாகும். நல்­லி­ணக்­கத்தையும் ஐக்­கி­யத்தையும் கொண்டு நாட்டை வளர்ச்­சிக்­குட்­ப­டுத்­து­வதே எமது குறிக்­கோ­ளாகும். இந்த பிரச்­சி­னையை மேலும் பெரி­துப்­ப­டுத்­து­வதற்கு நாம் தயா­ரில்லை.

நாட்டின் முப்­பது வரு­ட­கால யுத்தம் நிறை­வ­டைந்­துள்­ளது. சிறுப்­பான்மை மக்­களின் நலன்கள் தொடர்பில் நாம் ஆரா­ய­வேண்­டி­யுள்­ளது. தேசிய பிரச்­சினை தீர்வு விட­யத்தில் தென்­னா­பி­ரிக்­காவின் நிய­மிக்­கப்­பட்ட நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை நாம் நிய­மிப்போம். மேலும் தீர்வு விட­யத்தில் சர்­வ­தேச ஒத்­து­ழைப்­புடன் நாம் செயற்­ப­ட­வுள்ளோம். இதற்­கான ஆலோ­ச­னை­களை நாம் சர்­வ­தேச நாடு­க­ளி­லி­ருந்து கோர­வுள்ளோம்.

எனினும் நாட்டை காட்­டிக்­கொ­டுக்கும் வகையில் சர்­வ­தே­சத்தை இந்த பிரச்­சி­னையில் தலை­யி­ட­வைத்­தது மஹிந்த ராஜ­ப­க­ஷ­வாகும். சர்­வ­தேச விசா­ர­ணைக்கு முழு­மை­யான பொறுப்பை மஹிந்த ராஜ­ப­க்ஷவே ஏற்­க­வேண்டும். நாட்டில் உள்­ளக பொறி­மு­றை­யொன்றை ஆரம்­பிப்­ப­தாக ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாயகம் பான் கீ மூனிடம் வாக்­கு­றுதி அளித்து அதனை மீறி செயற்­பட்­ட­மை­யி­னா­லேயே சர்­வ­தேச அழுத்­தங்கள் இலங்கைக்கு எதி­ராக திரும்­பு­வ­தற்கு பிர­தான கார­ண­மாகும்.

மேலும் செப்­டம்பர் மாதம் அளவில் இலங்கை தொடர்பில் ஜெனிவா குழுவின் அறிக்கை வெ ளியி­டப்­ப­ட­வுள்­ளது. இது எமக்கு புதி­ய­தொன்­றல்ல பல தடவை குறித்த அறிக்கை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் குறித்த அறிக்­கை தொடர்பில் முன்­னைய அரசின் வெளிவி­வ­கார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எவ்­வாறு செயற்­பட்டார் என்­பது எமக்கு தெரி­யாது. இருந்த போதிலும் இந்த அறிக்கைக்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சாங்கம் வெற்­றி­க­ர­மாக முகங்­கொ­டுக்கும்.

ஆகவே நாட்டின் நல்­லி­ணக்­கத்தை முன்­ன­கர்த்­து­வதே எமது அர­சி­யலின் பிர­தான ் திட்­ட­மாக உள்­ளது. மேலும் சிறுப்­பான்மை மக்­களின் தீர்வு விட­யத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் முஸ்லிம் கட்­சி­களின் ஒத்­து­ழைப்பை கொண்டு தீர்வு காண திட்­ட­மிட்­டுள்ளோம்.

பிரச்­சி­னை­க­ளுடன் எம்மால் நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. இன ரீதி­யான பிரச்­சி­னைக்கு நாம் முடிவுக் கட்டி நல்­லி­ணக்கம் மற்றும் இன மதங்­க­ளுக்­கி­டை­யி­லான ஒற்­றுமை விட­யத்தில் நாட்டை முன்­ந­கர்த்த வேண்­டி­யுள்­ளது.

மேலும் தற்­போது தேசிய நல்­லி­ணக்­கத்­திற்கு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக குற்றம் சுமத்தி வரு­கின்­றனர். நாட்டின் தேசிய பாது­காப்­பிற்கு எந்­த­வொரு பாதிப்பும் ஏற்­பட இட­ம­ளிக்க போவ­தில்லை. 2005 ஆம் ஆண்டு நடைப்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலின் போது என்னை தோற்­க­டிப்­ப­தற்­காக விடு­தலை புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னுடன் உடன்­ப­டிக்கை கைச்­சாத்­திட்டு என்னை தோற்­க­டித்­தமை தேசி­யப்­பா­து­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லாக அமை­யா­விடின் , நாட்டின் நலனை கருத்திற் கொண்டு நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை

முன்­னெ­டுத்து செல்­வ­தனால் மாத்­திரம் எவ்­வாறு தேசிய பாது­காப்­புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.அது மாத்திரமின்றி கே.பி என்ற குமரன் பத்மநாதனை நாட்டிற்கு அழைத்து வந்துள்ளமை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையதா என்று வினவுகின்றோம்.ஆகவே நாட்டின் அபிவிருத்தியை மையமாக கொண்டு பொருளாதாரத்தை நான் கட்டியெழுப்புவேன். அதிக முதலீடுகளை நாட்டிற்கு வரவழைத்து காட்டுவேன். பொருளாதார ரீதியாக அனைத்து துறைகளையும் அபிவிருத்தி செய்து சர்வதேச சந்தைக்கு இலங்கையை கொண்டு செல்வேன்.

Related Post