Breaking
Mon. Dec 23rd, 2024

– முருகவேல் சண்முகன் –

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக, பல்வேறுபட்ட தவறான எண்ணக்கருக்கள் காணப்படுவதாகத் தெரிவித்த மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், இலங்கையின் இறையாண்மையிலும் சுதந்திரத்திலும் தலையிடும் முயற்சி அதுவல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், அந்தத் தீர்மானம், இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறலையும் மனித உரிமைகளையும் ஊக்குவிப்பதற்காகவே கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்தார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த அவர், தனது விஜயத்தை நிறைவு செய்யும் முகமாக, கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தில், ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினார். இதன்போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

By

Related Post