Breaking
Sat. Dec 13th, 2025

தனிப்பட விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜெனிவா வருகை தந்துள்ள மேல் மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு (வடக்கு) கல்வி சபை தலைவருமான ஏ.ஜே. எம். பாயிஸ் திடீர்   உடல் நலக் குறைவு காரணமாக ஜெனீவா போதனா வைத்தியசாலையில் (Geneva University Hospital)  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.  
 
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல் மாகாண சபை (கொழும்பு மாவட்டம்) உறுப்பினரும், கொழும்பு (வடக்கு) கல்வி சபை தலைவருமான   ஏ.ஜே. எம். பாயிஸ் கடந்த 20ம் திகதி தனிப்பட விஜயத்தின் நோக்கம் பிரான்ஸ் (பாரிஸ்) வந்து அங்கிருந்து தனது குடும்பத்துடன் ஜெனிவாவுக்கும் வருகை தந்த பொழுது உடலில் ஏற்படட திடீர் நலக் குறைவால்   ஜெனீவா போதனா வைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப் பட்டு சிகிசசை அளிக்கப்பட்டு வருகின்றார். 
  
இவரின் உடல் நலம் பெற அனைவரையும் பிரார்த்திக்கும் படி கேட்டுக் கொள்கிறோம். 


தகவல்  
முயிஸ் வாஹாப்தீன் ( ஜெனீவா)

By

Related Post