Breaking
Mon. Dec 23rd, 2024

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறுநீரகம் செயலிழந்துள்ளதால் உடனடி அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்லப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல் நிலையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இட்லி போன்ற உணவு வகைகளை எடுத்துக்கொள்வதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் ஜெயலலிதா அதிகமாக பெதட்டீன் என்ற வலி நிவாரணி எடுத்துக்கொண்டதால் ஏற்பட்ட பக்கவிளைவு காரணமாக சிறுநீரகம் செயலிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக மிக விரைவில் அமெரிக்கா செல்ல இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள Methodist Speciality and Transplant மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கல்லீரலும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதால் அதற்கான சிகிச்சையும் அங்கு நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.

தற்போது அதிக ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் அவதிப்பட்டுவரும் ஜெயலலிதா கடந்த 2 மாதங்களாக இதற்கான கூடுதல் சிகிச்சையில் இருந்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. tw

By

Related Post