Breaking
Sun. Dec 22nd, 2024

ஜெயலலிதாவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய தாம் தயாரில்லை. இந்திய மீனவர்களை மனிதாபிமானத் துடன் விடுதலை செய்வோம். ஆனால் படகுகளை மீளக் கையளிக்கமாட்டோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இந்திய மத்திய அரசுடனேயே பேச்சு வார்த்தை நடத்துவோம்.

தமிழகத்துடன் “பேச்சு” என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக கடற் தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில்,

இந்திய மீனவர்கள் எமது கடற் பரப்பில் அத்துமீறி ரோலர்கள் மூலம் மீன் வளங்களை அள்ளிச் செல்கின்றனர். கடற் தாவரங்களையும் அழிக்கின்றனர். இதனால் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது.

இதற்கு தொடர்ந்தும் இடமளிக்க முடியாது. எனவே எமது நாட்டின் கடற் படையினருக்கும் கடலோரப் பாதுகாப்பு பிரிவினருக்கும் அத்து மீறும் இந்திய மீனவர்களை கைது செய்யுமாறும் அவர்களது படகுகள், வலைகளை பறிமுதல் செய்யுமாறும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனால் ஜெயலலிதாவின் அச்சுறுத்தலுக்கு பயந்து மீளப் பெற்றுக் கொள்ளமாட்டோம். மீனவர்களை மனிதாபிமானத்துடன் விடுவிப்போம். ஆனால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளையும் வலைகளையும் மீளக் கையளிக்கமாட்டோம்.

இப் பிரச்சினை தொடர்பில் இந்திய மத்திய அரசுடனேயே பேச்சுக்களை நடத்துவோம். ஆனால் ஜெயலலிதாவுடன், தமிழக அரசுடன் பேச்சு நடத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

By

Related Post