ஜேர்மனியின் பெர்லின் நடைபெற்ற தேர்தலில் ஜேர்மனிய சான்சலர் ஏஞ்சலா மேர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக கூட்டணி வரலாற்று தோல்வியடைந்துள்ளது.
ஜெர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மேர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக கூட்டணியானது, 17.6 சதவீத ஆதரவையே பெர்லின் தேர்தலில் பெற்றுள்ளது.
இதனிடையே வலது சாரி குடியேறிகள் எதிர்ப்பு கட்சியான எ.எவ்.டி 14 சதவீத மக்களின் ஆதரவை வென்றிருக்கிறது.
இதனால், பெர்லின் உட்பட மொத்தமுள்ள 16 பிராந்திய நாடாளுமன்றங்களில் 10இல் அதற்கு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது.
பொது தேர்தல்களுக்கு ஓராண்டுக்கு முன்னால் அறிவிக்கப்பட்ட குடியேறிகளை ஏற்றுக்கொள்ளும் ஏஞ்சலா மேர்கலின் கொள்கையானது, பொது மக்களிடன் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.