-ப.பன்னீர்செல்வம் –
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக ஜேர்மன் அரசாங்கம் ஒரு மில்லியன் யூரோவை நிதியுதவியாக வழங்கியுள்ளது.
வௌ்ளம், மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களின் முதன்மைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே ஜேர்மன் அரசு இந்த நிதியுதவியை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக ஜேர்மன் வெளிநாட்டமைச்சர் டாக்டர். பிராங்வொல்டர் தெரிவித்திருப்பதாவது,
ஜேர்மனியின் சிந்தனைகள் தமது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காகவும், தமது வீடுகளை வாழ்வாதாரத்தை இழந்தவர்களுகாகவே இந்த நிதியுதவி எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிதியுதவியானது இலங்கைக்கென சர்வதேச ஆதரவுடன் ஏற்படுத்தப்பட்டு இலங்கை அரசாங்கத்துடனும் இங்குள்ள நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும் பகிர்ந்தளிக்கப்படும்.