Breaking
Sat. Jan 11th, 2025

ஜேர்மன் விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில நிமிடங்களுக்கு முன் துணை விமானி பேசிய கடைசி வார்த்தைகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 24ம் திகதி பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான விமானத்தில் முதன்மை விமானியும், துணை விமானியும் பேசிக்கொண்ட உரையாடல்களை கருப்பு பெட்டியிலிருந்து அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.

அதில், முதன்மை விமானியான Patrick Sondenheimer(34) என்பவர் பயணிகளை நோக்கி பார்சிலோனாவிலிருந்து விமானம் 26 நிமிடங்கள் தாமதமாக கிளம்புவதற்கு தான் மன்னிப்பு கோருவதாகவும், ஆனால், டஸல்டார்ஃப் (Dusseldorf) விமான நிலையத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றுவிடுவோம் எனவும் கூறுகிறார்.

இதனை தொடர்ந்து, துணை விமானியான Andreas Lubitz(27)-விடம், தான் ஸ்பெயினில் கழிப்பறைக்கு செல்ல முடியாமல் போய்விட்டதாக கூறுகிறார்.

இதற்கு பதிலளித்த துணை விமானி ‘நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கழிவறைக்கு செல்லலாம்’ என கூறுகிறான்.இந்த உரையாடல் நிறைவு பெற்றதற்கு பிறகு, சிறிது நேரம் கழித்து துணை விமானி ‘நீங்கள் இப்போது கழிவறைக்கு போகலாம்’ எனக்கூறுகிறான்.

இதனை தொடர்ந்து, ஒரு இருக்கை பின்னோக்கி தள்ளப்படுவதும், அதன் பிறகு கதவு சிறிய ஓசையுடன் மூடப்படும் சத்தமும் கருப்பு பெட்டியில் பதிவாகியுள்ளது.முதன்மை விமானி வெளியேறியதும், துணை விமானி மூச்சு விடும் மெல்லிய சத்தம் மட்டுமே பதிவாகியுள்ளது.

இந்நிலையில், விமான பறக்கும் உயரத்தின் அளவை(altitude) 38,000 அடிகளிலிருந்து 96 அடியாக மாற்றி பதிவு செய்கிறான். அதாவது, விமானம் பறந்துக்கொண்டிருக்கும் அதே வேகத்தோடு தரையிறங்கும் வகையில் மாற்றி அமைக்கிறான்.

விமானம் திடீரென கீழ் நோக்கி செல்கிறது. அப்போது, கதவின் பின்புறம் முதன்மை விமானி கதவை திறக்குமாறு உரக்க கத்துகிறார். கதவை கோடாரி போன்ற கம்பியால் தாக்கும் ஓசை கருப்பு பெட்டியில் பதிவாகியுள்ளது.

விமானம் மலையில் மோதுவதற்கு சரியாக 8 நிமிடங்களுக்கு முன்னால், விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் பயத்தால் அலறி துடிக்கும் ஓசை கேட்கிறது.விமானம் மலையில் மோதப்போவதை அறிந்த தானியங்கி எச்சரிக்கை குரல்(Automated Alarm) ‘மோத போகிறது…மேல் நோக்கி செல்லுங்கள்’(Ground..pull up…pull up) என திரும்ப திரும்ப எச்சரிக்கை விடுக்கிறது.

இந்த தானியங்கி குரலுக்கு பதிலளித்த துணை விமானி ’அனைவரும் தரையிறங்க தயாரா…..? அதையும் பார்ப்போம்’ (Preparing for landing..? hopefully..we will see) என கொடூரமாக கூறுவதுபோல் பதிவாகியுள்ளது.இதன் பிறகு விமானத்தின் வலது இறக்கை பலத்த சத்தத்துடன் மலையில் மோதி விபத்துக்குள்ளானது வரை கருப்பு பெட்டியில் பதிவாகியுள்ளது.

Related Post