Breaking
Mon. Mar 17th, 2025

ஜே.வி.பியில் இருந்து பிரிந்து சென்றுள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் இறுதிக் கிரியைகளின்போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

சோமவன்ச அமரசிங்க, இலங்கையின் இடதுசாரி அரசியலில் சர்வதேசவாதம் மற்றும் தேசியவாதம் என்ற இரண்டு கொள்கைகளை கொண்டிருந்ததாக தேரர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் ஜே.வி.பியில் இருந்து பிரிந்து சென்றுள்ள முன்னிலை சோசலிஸக் கட்சியினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து நாட்டுக்கு சேவையாற்ற முன்வரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

By

Related Post