Breaking
Mon. Dec 23rd, 2024
இலங்கையின் துரித மறுசீரமைப்புக்கான முன்மொழிவுகள் என்ற தலைப்பில் மக்கள் விடுதலை முன்னணி, தேசிய அரசாங்கத்திடம் பிரதான 20 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.  ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அந்த முன்மொழிவுகளின் முழு வடிவம் இதோ,
துரித மறுசீரமைப்புக்கான கோரிக்கைகள்
ஜனாதிபதி ராஜபக்ஷாவின் ஒரு தசாப்த காலத்திற்கு அண்மித்த ஆட்சியின்போது நாட்டில் சமூக அரசியல் துறையில் புரையோடிப்போயிருந்த அஜீரணமான அரசியல் கலாசாரத்துக்குப் பதிலாக நல்லாட்சி கொள்கையின் அடிப்படையில் புதிய மக்கள் வரணை உருவாக்கி ஒன்பது மாதங்கள் கடந்திருக்கிறது.
ஜனவரி 08 மக்கள் ஆணையில் அடங்கியிருந்த பிரதானமாக மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது ராஜபக்ஷாவை தனிநபர் என்ற வகையில் தோற்கடிப்பதற்கு அப்பாலான, ராஜபக்ஷ யுகத்தில் உருவாக்கப்பட்டிருந்த அரசியல் கலாசாரத்தை மறுதளிக்கவும் எதிர்காலத்தில் அது போன்ற நிலமைகள் தோன்றுவதற்கு உள்ள வாய்ப்பினை தடுப்பதற்காக சட்டரீதியானதும் நிர்வாக மறுசீரமைப்பை ஸ்தாபிப்பதற்காகும்.
அதற்காக பல காலங்களாக இந்நாட்டு அரசியல் மற்றும் சிவில் அமைப்புகளால் கோரி நின்ற மறுசீரமைப்பு பலவற்றை ஜனவரி 08ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அதேபோன்று ஆகஸ்ட் 17 பாராளுமன்றத் தேர்தலிலும் முனவைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடணத்திலும் அந்த மறுசீரமைப்புகள் உள்ளடங்கியிருந்தன. சுமார் 08 மாதங்களில் வெற்றியீட்டிய இரண்டு மக்கள் ஆணைகளால் அங்கிகரிக்கப்பட்டதான அந்த மறுசீரமைப்பு மற்றும் மேலும் அத்தியாவசியமான மறுசீரமைப்பு கோரிக்கைகள் இதில் உள்ளடக்கப்பட்டிருப்பது இத் தருணத்தில் நாட்டின் பொதுசன அபிலாஷைகளையும் தேவைகளையும் நிறைவேற்றும் பொறுப்பு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் பொறுப்பு வாய்ந்த நபர்களாக நம் அனைவரினதும் பொறுப்பு என்பதினாலாகும்.
அதேபோன்று இரண்டு மக்கள் ஆணைகளால் அனுமதிக்கப்பட்ட இந்த மறுசீரமைப்பை செயற்படுத்துவது மக்கள் ஆணையை மதிக்கின்ற ஆட்சியினதும் பொறுப்புமாகும். கீழ் காணப்படுவது அந்த துரித மறுசீரமைப்புக்கான கோரிக்கை அடங்கிய முன்மொழிவுகளாகும்.
01. நிறைவேற்று ஜனாதிபதி முறையை முழுமையாக ஒழிப்பதற்கு தேவையான அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ளல்.
02. கட்சி தாவும்; பாராளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமையை இல்லாதொழிக்கும் சட்டத்தை இயற்றுதல்
03. அமைச்சர்களின் எண்ணிக்கை 30க்கு மேலாகவும், இராஜங்க மற்றும் பிரதியமைச்சர்கள் 40க்கு மேலாக அதிகரிப்பதற்கு 19வது திருதத்தில் இருக்ககும் வாய்ப்பினை இல்லாதொழித்தல் மற்றும் பாராளுமன்ற சட்டத்தின் மூலமாக அமைச்சுக்களுக்கு பொறுப்பான விடயங்கள் மற்றும் நிறுவனங்களை விஞ்ஞான ரீதியான அடிப்படையில் வகுத்து சட்டமாக்கல்.
04. பன்முக அரசியல் போக்குகளை கொண்ட அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் விதமாக, மக்களின் விருப்பத்தை பாராளுமன்ற, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகளில் நியாயமான முறையில் பிரதிபலிக்கின்ற புதிய தேர்தல் முறையை விரிவான மக்கள் கலந்துரையாடலின் பின்னர் அறிமுகப்படுத்துதல்.
05. தகவல் அறியும் உரிமைக்கான சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி நடைமுறைப்படுத்துதல்.
06. தேசிய கணக்காய்வு சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி நடைமுறைப்படுத்துதல்.
07. புலம்பெயர் இலங்கையர்களுக்கு வெளிநாடுகளில் இருந்தவாறு வாக்களிப்பதற்கான திட்டமொன்றை தயாரிப்பதற்காக பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை அமைத்தல்.
08. இன, மத அல்லது வேறு வகையான வேறுபாடுகளின் காரணமாக எந்தவொரு பிரசையையும் துன்புறுத்தல், அவமானப்படுத்தல், பரிகாசம் செய்தல், மற்றும் அநீதி இழைக்கப்படுதலை முழுமையாக தடைசெய்வதுடன் அவ்வாறான நிலைக்கு ஆளான நபர்களின் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்வதற்கும் அவற்றை பரிசீலனைச் செய்வதற்கும் மற்றும் அவை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டோரை நீதிமன்றத்திற்கு வரவழைப்பதற்கான அதிகாரமுடைய பாரபட்சத்திற்கு எதிரான ஆணைக்குழுவொன்ற (Commission Against Discrimination) தாபித்தல்.
09. வடக்கில் இடம்பெற்ற 30 வருட யுத்தத்தில் பல்வேறு வகையாக பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கும் சேதம் ஏற்பட்ட சகலருக்கும் தமது மனக்குறைகளை தெரிவிப்பதற்கும் அவை பற்றிய உண்மையை கண்டறிந்து நிவாரணங்களை வழங்குவதற்கும் ஷஷதேசிய ஒற்றுமையை விருத்திச்செய்தல் மற்றும் மீளிணைத்தல் சட்டமூலமொன்றின் மூலம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று (Truth and Reconciliation Commission) தாபித்தல்
10. தற்போது அறியக் கிடைத்திருக்கும் சகல ஊழல் மோசடிகளையும் துரிதமாக விசாரிப்பதற்கும், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது அரசாங்கத்தின் முதன்மை பணியாக கருதி செயற்படல். சட்ட மா அதிபர் திணைக்களம், இரகசிய பொலிஸ், மற்றும் அரச புலனாய்வு நிறுனங்களை அரசியல் தேவைகளின் நிமித்தமாக விசாரணைகளை மறைப்பதற்கும், ஒத்திவைப்பதற்கும் பயன்படுத்திய கடந்த காலத்தைப் போன்று தற்போதும் நிலவும் நிலமையை உடனடியாக மாற்றியமைத்தல்.
11. ஊழல் மோசடி பற்றிய விசாரணைகளை மேற்கொள்ளல் மற்றும் பொறுப்பு வாய்ந்தவர்களை தண்டிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் வலுவுள்ளதாக்கல் மற்றும் சுயாதீன நிறுவனங்களாக மாற்றியமைத்தல்.
12. கல்வித் தொடர்பான செலவீனம் குறைந்தபட்சம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் ஒதுக்கப்படல் மற்றும் கல்வியில் சம உரிமையும் அதன் பண்புசார் தன்மையினையும் கல்வியுடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதையும் இலக்காக கொண்ட திட்டத்தை செயற்படுத்துதல்.
13. அரச ஊழியர்களின் சகல கொடுப்பனவுகளும் அடிப்படைச சம்பளத்துடன் சேர்த்தல்.
1. தனியார் துறையில் சகல ஊழியர்களின் சம்பளம் 2500 ரூபாவால் அதிகரிப்பதற்கு தேவையான சட்டத்தை இயற்றுதல்.
11. தோட்டத் தொழிலாளர்களின் உத்தேச நாட் சம்பளம் ரூபாய் 1000 வரை அதிகரித்தல்.
111. முறைசாரா தொழில் துறைகளின் பெரும் பங்கான கட்டுமான தொழில் துறைகளில் கைவினைஞர்களின் கட்டுமான தொழில் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளவாறு ஓய்வூதிய நன்மைகளையும் மற்றும் காப்புறுதி முறையொன்றையும் அமுல்படுத்துதல்.
14. அரச, நியதிசட்டமுறையான நிறுவனங்களில் தொழில் வழங்கும்போது அரசியல் நியமனங்கள் வழங்குவதை நிறுத்தி தகைமைக்கேற்ற வகையில் தொழில் வழங்கும் முறையொன்றை தாபித்தல்.
15. சிறுவர் மற்றும் பெண்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக தற்போதிருக்கும் சட்ட நியமங்கள் மற்றும் நிறுவனங்களை பலப்படுத்துதல், சிறுவர் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோகம் பற்றிய விசேட நீதிமன்றமொன்றை தாபித்தல் 16. தற்போதைய இளஞ் சமூகத்தினரை போதை பொருளிலிருந்து மீட்பதற்காக நச்சுதன்மையுடனான போதைபொருள் விஸ்தரிப்பை நிறுத்துவதற்கும் போதைபொருள் வியாபாரிகளுக்கு எதிராக சட்டத்தை வலுவான முறையில் அமுல்படுத்துவற்கு தேவையான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
17. நெல், இரப்பர் மற்றும் தேயிலை ஆகியவற்றிக்கு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட உத்தரவாத விலையை தனியார் துறைக்கும் ஏற்றவாறு சட்டமாக்குதல், மற்றைய விவசாய உற்பத்திகளுக்கும் உத்தரவாத விலையை பெற்றுக் கொடுத்தல் அந்த உத்தரவாத விலைகளை சட்டமாக்குதல்.
18. கலைஞர்களின் தொழில் கௌரவத்தை பேணும் வகையில், கலை படைப்புகளுக்கு பூரணமான சுதந்திரம், சகல பிரஜைகளுக்கு கலைஞர்களின் படைப்புகளை இரசிப்பதற்கு வசதிகளை செய்துகொடுத்தல் உள்ளிட்ட கலை மற்றும் ஊடகத் துறைகளை உள்ளடக்கியதான தேசியக கொள்ளைகத் திட்டமொன்றை வகுத்தல், அதன் நிமித்தம் அத் துறைசார்ந்த வல்லுனர்கள் அடங்கிய சபையொன்றை தாபித்தல்.
19. மக்களின் தகவல் அறியும் உரிமைக்கும் மற்றும் அறிவினை பெற்றுக் கொள்ளும் உரிமைக்கும் தடையேற்படாத வகையில் கலை படைப்பாளிகளின் உரிமையை உறுதிச் செய்யும் வகையில் தேசிய புலமைச் சொத்துக்கள் பணியகத்தை மேலும் வலுப்பெறச்செய்தல்.
20. இயற்கை வளங்கள் மற்றும் சூழலை தேசிய தேவைகளுக்கு ஏற்ப பாதுகாத்தல் மற்றும் நிலைபேரான முகாமைத்துவத்திற்கான தேசிய கொள்கையொன்றை வகுத்தல், தற்போதிருக்கும் சுற்றாடலுக்கான கொள்கைகள், சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை மீளாய்வுச் செய்து பலப்படுத்துதல்.

Related Post