Breaking
Thu. Dec 26th, 2024

ஜோதி­டரின் பேச்சைக் கேட்டு முன்னதா­கவே ஜனா­தி­பதி தேர்­தலை நடத்­தி­ய­மையையிட்டு தற்­போது கவ­லை­ய­டை­கின்றேன். தற்­போது நான் ஜோதி­டர்­களை நம்­பு­வ­தில்லை என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.

புதிய அர­சாங்­கத்தின் கீழ் அர­சியல் ஸ்திர­மின்மை காணப்­ப­டு­கின்­றது. எனவே நாட்டில் ஸ்திரத்­தன்­மையை உறு­தி­செய்­வ­தற்­காக விரைவில் பாரா­ளு­மன்ற தேர்தல் நடை­பெற­வேண்டும் எனவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ குறிப்­பிட்­டுள்ளார். ஏ.எப்.பி. செய்­திச்­சே­வைக்கு வழங்கி­யுள்ள விசேட செவ்­வி­யி­லேயே அவர் இதனை குறிப்­பிட்­டுள்ளார்.

அந்த செவ்­வியில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது;அர­சாங்கம் எனது குடும்­பத்­தி­ன­ருக்கு எதி­ரான அர­சியல் பழி­வாங்­கல்­களில் ஈடு­பட்­டுள்­ளது. எனது ஆட்சி ஊழல் நிறைந்­தது என சித்­த­ரிக்க முற்­ப­டு­வதன் மூல­மாக என்னை மைத்­தி­ரி­பால சிறி­சேன அச்­சு­றுத்த முயல்­கின்றார்.

அவர்­க­ளிடம் ஆதா­ரங்கள் இல்லை. அவர்கள் கண்­மூ­டித்­த­ன­மான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்­கின்­றனர். இது அர­சியல் பழி­வாங்கல் நட­வ­டிக்­கை­யாகும். நானோ அல்­லது எனது குடும்­பத்தை சேர்ந்­த­வர்­களோ தவ­றான வழியில் பணம் சேர்க்­க­வில்லை.

முதலில் என்­னிடம் சுவிஸ் வங்­கிக்­க­ணக்­குகள் உள்­ள­தாக தெரி­வித்­தனர். பின்னர் துபாயில் இருப்­ப­தாக தெரி­வித்­தனர். அந்த பணத்தை காண்­பி­யுங்கள் ஆதா­ரங்கள் எங்கே என்று கேட்­கின்றேன்.்துபாயில் எனக்கு ஹோட்­ட­லொன்று இருப்­ப­தாக தெரி­வித்­தனர். அதன் பின்னர் இலங்­கையில் உள்ள அனைத்து ஹோட்­டல்­களும் எனக்கும் எனது சகோ­த­ரர்­க­ளுக்கும் சொந்­த­மா­னவை என குறிப்­பிட்­டனர். இது ஓரு நகைச்­சு­வை­யாகும்.

நான் ஒரு­போதும் சீனா­விற்கு சார்­பாக செயற்­பட்­ட­தில்லை, இலங்­கையின் நலன்­களை மனதில் வைத்தே செயற்­பட்டேன். அனைத்து பாரிய அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளையும் முதலில் இந்­தி­யா­விற்கே வழங்­கினேன். ஆனால் அவர்கள் அதனை ஏற்­க­வில்லை.

குறிப்­பிட்ட காலத்­திற்கு முன்னர் தேர்தல் நடத்­தி­யது பாரிய தவறு என்­பதை ஏற்­றுக்­கொள்­கின்றேன். ஜனா­தி­பதி தேர்­தலை இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்­னரே நடத்­தி­யது மிகப்­பெரும் தவ­றாகும். இதற்­காக நான் தற்­போது வருத்­த­ம­டை­கிறேன். குறிப்­பிட்ட திக­தியில் தேர்தல் நடத்­தினால் எனக்கு வெற்றி நிச்­சயம் என ஜோதிடர் தெரி­வித்தார். நான் சகல ஜோதி­டர்­க­ளிலும் தற்­போது நம்­பிக்­கையை இழந்­து­விட்டேன்.

நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. தற்போது ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றேன். புதிய அரசாங்கத்தின் கீழ் அரசியல் ஸ்திரமின்மை காணப்படுகின்றது. ஸ்திரத்தன்மையை உறுதிசெய்வதற்காக விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவேண்டும்.

-வீரகேசரி-


Related Post