Breaking
Mon. Dec 23rd, 2024

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஜோன்ஸ்டன் பெனாண்டோ சார்பில் குருநாகல் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை கோரிக்கை மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.

25,000 ரொக்கப் பிணையிலும் 25 லட்சம் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் முன்னாள் அமைச்சர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஜோன்ஸ்டன் பெனாண்டோவிற்கு பிணை வழங்க சட்டமா அதிபர் இன்று எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சதோச நிறுவனத்தில் 50 லட்சம் ரூபாவிற்கு பொருட்கள் கொள்வனவு செய்து அதனை திருப்பிச் செலுத்தாமல் இருந்த குற்றத்திற்காக ஜோன்ஸ்டன் பெனாண்டோ கைது செய்யப்பட்டார்.

Related Post