Breaking
Fri. Nov 22nd, 2024

-இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ்-

ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக இருப்பதற்கு எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் அதனது தேசிய தலைமைத்துவமுமே காரணமாகும்.ஆனால் இன்று சில வங்குரோத்து நிலை அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆக வேண்டும் என்பதற்காக செல்லாத தீர்மானங்களை எடுப்பது நகைப்புக்கிடமானது என மன்னார் நகர சபையின் உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் தெரிவித்தார்.

வன்னி மாவட்டத்தின் அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேலும் அவர் கூறியதாவது –

கடந்த காலங்களில் இடம் பெற்ற அனைத்து தேர்தல்களிலும் எமது தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தியது.இந்த வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தார்கள்.இந்த மக்கள் வாக்களித்தமை அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது கொண்ட நம்பிக்கையின் வெளிப்பாடே,அதே போல் இந்த வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று கங்கனம்கட்டிக்கொண்டு எமது வெற்றிக்கு எதிராக செயற்பட்டவர்கள் படுதோல்வி அடைந்தார்கள்.அவர்கள் கட்சியின் பிரதம அமைப்பாளர் என்றும் தெரிவித்து வந்ததை  நினைவுபடுத்தவிரும்புகின்றேன்.

மக்கள் செல்வாக்கில்லாமல் நிராகரிக்கப்பட்ட ஒரு குழுவினர் இந்த மன்னார் மாவட்டத்தில் எமது தேசிய தலைமைத்துவம் மேற்கொண்டுள்ள அபிவிருத்திகளை கண்டு வாயடைத்துப் போயுள்ளதுடன்,எதிர்காலத்திலும் மக்கள் இந்த தேசிய தலைமைத்துவத்துடன் தான் இருப்பார்கள் என்பதை அறிந்து கொண்டதன் விளைவாக தொன்தோன்றித்தனமான தீர்மானங்களை வெளியிடுகின்றனர்.இது தொடர்பில் ஜக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் கடும் சினம் கொண்டுள்ளது.

இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சி அமைப்பதற்கு முழுமையாக ஆதரவு வழங்கிய கட்சி தான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியாகும்.அன்று மன்னாருக்கு தேர்தல் பிரசாரத்தை ஏற்பாடு செய்திருந்த எமது கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் தலைமையில் மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்து கொண்டு பேசும் போது, முஸ்லிம்களின் தேசிய தலைவராக அமைச்சர் றிசாத் பதியுதீன் தான் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.அவர் முன்னாள் அரசாங்கத்தில் கொண்டிருந்த பலமிக்க அமைச்சைக் கூட துாக்கி எரிந்துவிட்டு எமது வெற்றிக்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளார் என்று கூறியதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.புதிய அரசாங்கத்தை உருவாக்க எமது தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் அவரிகளுக்கு அழைப்புவிடுத்த ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதமராக வருவதற்கு அதரவு வழங்கியதும் எமது தலைமை என்பதை இங்கு கூறிக் வைக்கவிரும்புகின்றேன்.

வெறுமனே அறிக்கைகளை விடும் இந்த குழுக்கள் மன்னார் மக்களுக்கு என்ன அபிவிருத்திகளை பெற்றுக்கொடுத்துள்ளார்கள்.மக்களுக்கு வருகின்ற அபிவிருத்திகளை இல்லாமல் செய்ய வேண்டாம் என வேண்டிக்கொள்வதுடன்,பொறுப்பற்ற அறிக்கைகளை விடுவதன் மூலம் மக்களை திசை திருப்பி அவர்கள் பிரதி நிதித்துவப்படுத்தும் கட்சிக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் நடவடிக்கைகளிலேயே ஈடுபடுவது தெளிவாகின்றது.

இந்த விடயம் தொடர்பில் ஜக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும்.அப்பாவி மக்களை அபிவிருத்தியின் எதிரிகளாக காண்பித்து அவர்களது அரசியலை தக்க வைத்துக் கொள்ள முனைவதாகவும் மன்னார் நகர சபை உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் தெரிவித்தார்.

Related Post