Breaking
Sun. Dec 22nd, 2024

நாட்டில் வாழும் சிறு­பான்மை இனத்த­வர்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கட்­ட ­விழ்த்து விட்டு வேடிக்கை பார்ப்­ப­தற்கு அர­சாங்­கத்­திற்கு அரு­க­தை­யில்லை. ஆகை யால், தொடர்ச்­சி­யாக முஸ்­லிம்­களின் வண க்க வழி­பா­டு­க­ளுக்கு இடை­யூறு விளை­விக்கும் வகையில் செயற்­படும் கல­கொட அத்தே ஞான­சார தேரரை உட­ன­டி­யாக கைது செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் கோரிக்கை விடுத்தார்.

முன்னாள் ஆட்­சியின் போதே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­முறை கட்­ட­விழ்த்து விடப்­பட்­ட­தாக கூறி ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­திய முஸ்­லிம்­க­ளுக்கு, இறு­தியில் ஏமாற்­றமே பதி­லாக கிடைத்­துள்­ளது. என வே நாட்டின் நல­னுக்­காக மஹிந்த ராஜ­ப­க்ஷவை மீளவும் பிர­த­ம­ராக்க வேண்டும் எனவும் அவர் வேண்­டினார்.

இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் கேச­ரிக்கு கருத்து தெரி­விக்­கையில்,

இலங்­கையில் பிரித்­தா­னி­யர்­களின் ஆட்­சிக்­கா­லத்தின் போது சோல்­பரி யாப்பில் சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளுக்­கான விசேட ஏற்­பா­டுகள் பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருந்­தன. இதன்­பி­ர­காரம் குறித்த யாப்பின் 29ஆவது உறுப்­பு­ரையில் சிறு­பான்மை இனத்­த­வர்­க ­ளுக்கு எதி­ரான மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை வாக்­கு­க­ளினால் எந்­த­வொரு சட்­டத்­தையும் நிறை­வேற்ற முடி­யாது என்ற உரிமை வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

எனினும் குறித்த சட்டம் 1972ஆம்ஆண்டு முத­லா­வது குடி­ய­ரசு யாப்பில் முழு­மை­யாக இல்­லாமல் செய்­யப்­பட்டு, சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டது. இதன்­பின்பு 1978ஆம் ஆண்டின் இர ண்­டா­வது குடி­ய­ரசு யாப்பில் சிறு­பான்மை இனத்­த­வர்­களின் பாது­காப்பை கருத்திற் கொண்டு விசேட ஏற்­பா­டுகள் கொண்டு வர ப்­பட்­டன. இந்­நி­லையில் தற்­போது பொது பல சேனா என்ற இன­வாத அமைப்பு தொடர்ந்தும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யாக வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்து வரு­கி­றது. ஹலால் சின்­னத்தை தடை செய்­ய­கோரும் பொது­பல­சேனா அமைப்பின் செயற்­பா­டுகள், மீளவும் ஹலால் சின்­னத்­திற்கு எதி­ராக திசை­தி­ரும்­பி­யுள்­ளது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் போதே முஸ்லிம்களுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­ப­டு­ வ­தா­கவும், குறித்த ஆட்­சியை உட­ன­டி ­யாக மாற்­றி­ய­மைக்க வேண்டும் எனவும் சமூ­கத்­த­வர்­க­ளி­டையே விழிப்­பு­ணர்­வு­களை செய்து, முஸ்­லிம்­களின் ஆத­ர­வுடன் மஹிந்தவின் ஆட்­சியை தோற்­க­டித்­தனர்.

இருந்த போதிலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக எந்­த­வொரு அநி­யா­யமும் இனி­மேலும் இடம்­பெ­றாது என்று நம்­பி­ய­வர்­களின் மன தில் எதிர்­பா­ராத வித­மாக நல்­லாட்­சி­யிலும் இன­வாதம் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள் ளது. மரக்­கி­ளை­யி­லுள்ள இரண்டு சிட்­டுக்­கு­ரு­விக்கு ஆசைப்­பட்டு பிடிக்க போய், கையி­லி­ருந்த ஒரு சிட்­டுக்­கு­ரு­வி­யையும் கைவிட்ட நிலை­மைக்கு முஸ்­லிம்­களின் நிலைமை காணப்­ப­டு­கி­றது. இது தொடர் பில் அமைச்சர் ரவூப் ஹக்­கீமின் கருத்தும் பாராட்­டத்­தக்­கது.

எவ்­வா­றா­யினும் முஸ்­லிம்கள் நம்­பி க்கை கொண்ட நல்­லாட்­சியில் இன­வாத செயற்­பா­டுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மஹிந்த ராஜபக் ஷவை மீளவும் பிரதமராக ஆட்சியில் அமர்த்த வேண்டும். அதன்பின்னரே நாட்டின் சமாதானம் ஏற் படுத்தப்படும்.

இந்நிலையில் முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளுக்கு தடையாக காணப்படும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடன டியாக கைது செய்ய வேண்டும் என்று கோ ரினார்.(vi)

Related Post