எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க வர வேண்டுமென ஞானசாரர் தேரர் ஆசைப்பட்டது மஹிந்த ராஜபக்ஸவின் விருப்பத்திற்கு அமையவே என ஆசாத் சாலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
பொது வேட்பாளராக ரணில் நிறுத்தப்பட்டால் எதிர்க்கட்சி தோல்வியடையும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நம்பினார். எனவே தோல்வியடையும் வேட்பாளரை பொது வேட்பாளராக நிறுத்த ஞானசாரர் முயன்றார். ஆகவேதான் ரணிலுக்கு ஆதரவாக ஞானசாரர் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தார்.
இருந்தபோதும் நாம் சகல திட்டங்களையும் முறியடித்து பொது வேட்பாளராக நாட்டுக்கு தேவையான மைத்திரியை நியமித்துள்ளோம் என்றார்.